திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சுப்புலெட்சுமி நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் சாலை இல்லததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.