நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் திட்டச்சேரி - காரைக்கால் சாலையில் ஏராளமான பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையோரம் கொட்டிக் கிடக்கும் கழிவுகளை பன்றிகள் கிளறி விடுகின்றன. .இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் பன்றிகள் செல்வதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்.