எப்போது திறக்கப்படும்?

Update: 2022-07-31 15:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பஜார் வீதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மப்பேடு காவல் நிலையம் சார்பில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காவல் உதவி மையம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதன் காரணமாக பேரம்பாக்கம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அப்பகுதி மக்களின் சட்டப் பிரச்சனைகள் மற்றும் குறைகளை போலீசாரிடம் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பேரம்பாக்கம் பஜார் வீதியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த காவல் உதவி மையத்தை உடனடியாக திறந்து வைத்து அதில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்