காஞ்சீபுரம் மாவட்டம் சங்கூசாபேட்டை தெருவில் குப்பை தொட்டி இல்லாததால், பொதுமக்கள் தெருவில் குப்பை கழிவுகளை கொட்டிவிடுகின்றனர். அங்குள்ள கால்நடைகள் அந்த குப்பைகளை இழுத்துச்சென்று தெருவெல்லாம் பரப்பிவிடுகிறது. இதனால் அந்த தெருவே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவில் குப்பை தொட்டி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.