சாலை சீர்செய்யப்படுமா?

Update: 2025-09-14 11:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, ஆவடி-பூந்தமல்லி சாலை மிகவும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் அடிக்கடி கேபிள் ஒயர் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. ஆனால் அவை சரியாக மூடப்படுவதில்லை. மேலும் மூடப்படும் பள்ளங்களும் உறுதியான சிமெண்ட் கலவைகளால் நிரப்பபடுவதில்லை. இதனால் அவைகள் சாலையில் மீண்டும் பெயர்ந்து வரும் அவலநிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகமான பள்ளி-கல்லூரிகளும் இருப்பதால் மாணவர்களும் கடுமையான சிரமத்தை சந்திக்கிறார்கள். பொதுமக்களின் பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்