சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலை திருவல்லிக்கேணி சார்-பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள நடைப்பாதையில் வயர்கள் பொதுமக்களுக்கு இடையூராக கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பெரியவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் அவலம் நிகழ்கிறது. மேலும் அதே பகுதியில் உள்ள மின்பெட்டியும் திறந்து வயர்கள் வெளியே தெரியும்வண்ணம் ஆபத்தான முறையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.