திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர்-திருவேற்காடு, ஆவடி-பூந்தமல்லி சாலைகளை இணைக்கும் பருத்திப்பட்டு இணைப்பு சாலையில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த 1 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையின் பெரும்பாலான இடங்கள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக, பள்ளங்களுடன் இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள். பல நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த அவலநிலையை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பல்லாங்குழி சாலையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.