பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-09-14 11:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி 1,2,8,9-வது வார்டு பகுதிகளில் உள்ள அருள் நகர், பிரியா நகர், காமாட்சி நகர், திருமலை நகர், பி.ஆர்.வி. நகர், கன்னியப்பன் நகர், கணபதி நகர் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் ஒரு 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளது. இங்கிருந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை செல்வதற்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு ஆட்டோவை நம்பியிருக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தமாக அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்திதர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்