சென்னை பட்டாளம், ஆஞ்சிநேயர் கோவில் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் வயர்கள் வெளியே நீண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்உள்ளது. குழந்தைகள் அதிகம் சுற்றித்திரிந்து விளையாடும் பகுதி என்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் புதிய மின்பெட்டியை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.