குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-30 14:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட திருவேங்கட நகர் முதல் பெரியார் நகர் வரை செல்லக்கூடிய சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் நீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடிய பெண்கள், பள்ளி மாணவர்கள் மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்