திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பிரபல ஓட்டல் செல்லும் பாதையில் பாதாள சாக்கடை திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த பகுதியில் கடந்து செல்லும் பாதசாரிகள் தெரியாமல் தடுக்கி விழும் சம்பவங்களும் ஏற்படுகிறது. உடனடியாக இந்த பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.