திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூர் எர்ணீஸ்வரர் நகர் 4-வது தெருவில் மழை நீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கழிவுநீர் இணைப்பு சீர் செய்ய முடியாததால் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி வருகிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வழி வகுக்க வேண்டும்.