காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடியிலிருந்து மாங்காடு, குன்றத்தூர் செல்லும் சாலை போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் நிறைந்து காணப்படுகிறது. கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம், பட்டு கூட்டு சாலை போன்ற இடங்களுக்கு தினமும் இரவு நேரத்தில் அதிகமான மக்கள் இந்த சாலையில் பயணிக்கிறார்கள். ஆனால் மின் விளக்குகள் தட்டுப்பாட்டால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.