புதிய கட்டிடம் தேவை

Update: 2022-07-29 15:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டிடத்தில் பால்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 20 குழந்தைகள் இதில் வந்து படிக்கின்றனர். இந்நிலையில் இந்த பால்வாடி சுவரில் இருக்கக்கூடிய சிமெண்ட் கலவைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது. போதிய அடிப்படை வசதிகளும் குழந்தைகளுக்கான கழிப்பிட வசதிகளும் இந்த கட்டிடத்தில் இல்லை. எப்பொழுது இடிந்து விழுமோ! என்ற நிலையில் கட்டிடம் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பால்வாடி கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்