திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உயர் கோபுரம் மின் விளக்கு ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. மேலும் பஸ் நிலையத்திற்கு உள்ளேயும் மின்விளக்கு வசதி கிடையாது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பேரம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.