சென்னை வேளச்சேரி பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை கடந்த 5 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே திறந்த வெளியில் சிலர் சிறுநீர் கழிக்கிறார்கள். பஸ் நிலையத்தில் பஸ் ஏற வரும் பயணிகளுக்கு இந்த நிகழ்வு முகம் சுழிக்கும் வகையில் இருப்பதோடு, துர்நாற்றத்தையும் வீசுகிறது. எனவே பூட்டிய கழிப்பறையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?