வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-07-27 13:59 GMT

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மடப்புரம் உள்ளது. இது வரம்பியும் ஊராட்சியைச் சேர்ந்த பகுதி. இதில் மடப்புரம் விநாயகர் கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள், மடப்புரம்

மேலும் செய்திகள்