திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் மருதுபண்டி நகர் காந்தி தெருவில் உள்ள பாதை பழுதடைந்து உள்ளது. இந்த பாதை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் சாக்கடை நீர் எளிதில் தேங்கிவிடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதும், கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழி வகுக்கிறது. சாலையை சரி செய்து மக்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.