திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் மப்பேடு பகுதியில் ஆண்கள் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆண்கள் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டது. மேலும் சுகாதார வளாகம் முன்பு அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கழிவுகளை கொட்டி செல்வதால் அதிகமான துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அதன் அருகே வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மப்பேடு பகுதியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி இருக்கும் ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.