திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த கோவில் குளம் தூர்வாரப்படாமல் குளத்தைச் சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது. எனவே திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோவில் குளத்தை சீரமைத்து குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.