கழிவுநீர் கசிவு

Update: 2022-07-26 15:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில், இந்திரா காந்தி நகர் கிழக்கு, டி.ஆர்.ஆர் தெருவில் கடந்த பல மாதங்களாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் மூடியிலிருந்து கழிவு நீர் கசிந்து வருகிறது. இப்படி வெளியேறும் கழிவு நீர் சாலை முழுவதும் தேங்கும் சூழல் அமைகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்