அலைக்கழிக்கப்படும் பெண்கள்

Update: 2022-07-26 15:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் வெங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை அனைத்தும் எவ்வித கட்டணமும் இல்லாமல் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால் வெங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த பரிசோதனை சிறுநீர் பரிசோதனை இலவசமாக செய்ய முன் வராமல் இவர்களால் நியமிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் செயல்பட்டு வரும் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு பரிந்துரை செய்து கமிஷன் பெற்று வருகிறார்கள். அதே போல கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனையையும் திருவள்ளூர் தேரடிக்கு அருகில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரில் மட்டுமே எடுக்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்