திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம்,மேலவாசல் கிராமத்தில் குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை சுற்றித்திரியும் குதிரைகள் சேதப்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குதிரைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும், மேலும் குதிரைகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மேலவாசல்.