திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் சிகிச்சை பெறுபவர்கள், அவருக்கு உதவியாக வருபவர்கள் என எந்த நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெட்ட வெளியில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் சில நேரங்களில் வாகனங்கள் திருட்டுப் போவதும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்