மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர்சாலையில் பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்வதால் இந்த பகுதி சேறும், சகதியும் நிறைந்து விடுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பொதுமக்கள், மயிலாடுதுறை