பராமரிப்பு இன்றி இயக்கப்படும் அரசுபஸ்கள்

Update: 2023-08-13 14:35 GMT


மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நகர பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சரியான பராமரிப்பு இல்லாமல் இயங்குகிறது.இப்பஸ்கள் சென்று கொண்டு இருக்கும் போதே பாதி வழியில் பழுதாகி நின்று விடுகிறது.டயர் பஞ்சர் மற்றும் டயர்கள் வெடிக்கும் நிலை உள்ளது.இதனால் பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஆகையால் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மயிலாடுதுறை, பொதுமக்கள்

மேலும் செய்திகள்