திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தின் தரை தளம் மற்றும் முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில், போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் பல மாதங்களாக பாழடைந்து கிடப்பதோடு பீங்கான்களும் உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் அலுவலகத்தின் குப்பை கூளங்களை மூட்டையாக கட்டி கழிவறையில் போட்டு வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கழிவறைகளை சரி செய்ய வேண்டும்.குப்பைகள் நிறைந்த கழிவறை