திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் தக்கோலம் நெடுஞ்சாலையில் இருந்து ஒரத்தூர் கிராமம் வழியாக பேரம்பாக்கம் செல்லும் சாலை சீராக இல்லாததால். அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குளாகிறது, தற்போது தொழிற்சாலைக்கு செல்லும் பெண்களை ஏற்றி செல்லும் நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே சாலை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.