மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து குத்தாலம் மற்றும் கும்பகோணம் செல்வதற்கும் மற்றும் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்கும், மதிய நேரங்களில் பஸ் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஆகையால் சரியான நேரத்திற்கு பஸ் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பொதுமக்கள், குத்தாலம்