மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேமாத்தூர் ஊராட்சி மேலத்தெருவில் சிமெண்டு சாலை போடப்பட்டது. இந்த நிலையில் சரியாக போடாததால் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்
நாகராஜன், மயிலாடுதுறை