மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல்தூரம் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பொதுமக்கள், தரங்கம்பாடி