மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தாமரை குளம் ஓன்று ஊரின் நடுவில் அமைந்துஉள்ளது. இந்த குளத்தை தூர் வார்கிறோம் என்று அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழம் அதிகமாக உள்ளது. இதனால் குளத்தை சுற்றி கோவில், மற்றும் வீடுகள் பாதிப்பு அடையக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை