திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் இருக்கும் புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் காக்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்ற சம்பவங்களை தெரிவிக்க சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்கு தான் சென்று வருகிறார்கள். பொதுமக்களின் சிரமங்களை போக்க உடனடியாக காவல் நிலயத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.