திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்த தரை பாலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது வரை இந்த தரைப் பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பேரம்பாக்கம் கிராமத்திற்கு வரும் இருளஞ்சேர, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் வரை சுற்றி வரும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.