திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சி.டி.எச் சாலை கவரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. இந்த பகுதியில் கோவில், வணிக வளாகங்கள், மருத்துவமனை என முக்கியமான நிறுவனங்கள் இருப்பதால், இந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.