திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள மின்சார அலுவலகம் எதிரே குப்பைகள் குவிந்துள்ளன. இந்த குப்பைகளை கால்நடைகள் இழுத்துச் சென்று சாலையில் போடுவது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. இதனால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.