சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி முதல் குறுக்கு தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி எரிந்து விட்ட நிலையில் தற்காலிக இணைப்பு கொடுக்கப்பட்டது. தற்காலிக இணைப்பு நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட நிலையில் இன்றளவும் புதிய பெட்டி அமைக்கப்படாமல் உள்ளது. தற்காலிகமாக கொடுக்கப்பட்ட இணைப்பு ஆபத்தான முறையில் உள்ளதால் மழைக்காலங்களில் அச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.