சென்னை வேளச்சேரி, ஒராண்டியம்மன் கோவில் தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெரு பெயர் பலகை சரிந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது. பெயர் பலகை இல்லாததால் புதிதாக வரும் மக்கள் வழிதெரியாமல் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, புதிய தெரு பலகை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.