மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்கு மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் செல்லும் நிலை ஏற்படுகிறது.குறிப்பாக திருமணஞ்சேரி போன்ற முக்கிய கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது .இக்கோவில்களுக்கு வரும் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சிரமப்படுகின்றனர்.ஆகையால் குத்தாலம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்