திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தின் மீது பெரிய பள்ளம் விழுந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.