சேலம் மேற்கு 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த தெருவில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் கால்வாயில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படுவதில்லை. எனவே அதிகாரிகள் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், சேலம்