திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் சின்னகளக்காட்டுர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி மையம் , செல்லும் சாலை உடைந்தும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைகாலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.