சென்னை அடையாறு, இந்திரா நகர் ரங்கநாதபுரம் 20-வது குறுக்கு தெரு மற்றும் 18-வது குறுக்கு தெருகளில் கழிவுநீர் சாலையில் செல்கின்றது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுமோ! என்று அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்க்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா.