சென்னை திருவேற்காடு 18-வது வார்டு நூம்பல், தெருவீதி அம்மன் கோவில் தெருவில். குப்பைகள் கொட்டப்பட்டு பன்றிகளும் நாய்களும் வசிக்கும் இடமாக உள்ளது. குப்பைகள் சாலையில் சிதறுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.