காங்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் வார்டு 43 பெருமாள் கோவில் தெற்கு மாடவீதி மற்றும் வேகவதி தெருக்களில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும், அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?