அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்

Update: 2023-05-28 14:13 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு, மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகிறது பாதி வழியில் நின்று விடுகிறது.இதனால் பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பஸ் பழுது சரி செய்து அல்லது வேறு மாற்று பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்