சென்னை, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மார்கெட் அருகில் மின்சார வயர்கள் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. சில நேரங்களில் வயரில் இருந்து தீப்பொறிகள் பறக்கின்றன. பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின்வயர்களை உடனடியாக மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.