காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம், மாத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலார்கள் தங்கியிருந்து தொழிற்சாலை நிறுவனங்கள் கட்டுமான பணிகளில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் ஹான்ஸ், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அப்பகுதியில் உள்ள சிறிய கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தங்கு தடையின்றி விற்கபடுகிறது. போதை ஆசாமிகள் சாலையில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒரகடம் பகுதியில் தாரளமாக விற்கப்படும் ஹான்ஸ், பான் மசாலா ,குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மரியதாஸ்,