காஞ்சீபுரம் மாவட்டம் பொதுமக்களால் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மறுசுழற்சி இயந்திரம் நிறுவப்பட்டது. இந்நிலையில் திறந்து வைத்து சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த இயந்திரம் தற்போது பயன்பாடின்றி உள்ளது. பஸ் நிலையம் முழுவதும் அதிக அளவில் குடிநீர் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைத்துக்கொண்டு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிளாஸ்டிக் துகளாக்கும் இயந்திரத்தை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.