காஞ்சீபுரம், சின்ன காஞ்சீபுரம் ஏழுமலைநகரில் உள்ள விளையாட்டு பூங்கா செடி, கொடிகளுடன் விஷ பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது. குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் உடைந்து துரு பிடித்து உபயோகமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இப்பூங்காவை புதுப்பித்து மீண்டும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.